G.V.பிரகாஷ் இசையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் சூர்யாவுக்காக பாடவிருக்கிறார்

விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற செந்தில் கணேஷ், அதன்பிறகு திரையுலகில் பல படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். இந்நிலையில் சூர்யா நடித்து வரும் ஒரு படத்தில் பாடல் ஒன்றை அவர் பாடி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா தற்போது நடித்து வரும் 'சூரரைப் போற்று' என்ற படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் மேலும் ஜாக்கி ஷெராப்,பரேஷ் ராவல், கருணாஸ், மோகன் பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.