P.V.சிந்து பயோ பிக்கில் தீபிகா படுகோன்!

சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பி.வி.சிந்துவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை அருந்ததி, ஒஸ்தி, தேவி ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் தயாரிக்கிறார். பி.வி. சிந்துவின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் கதாபாத்திரத்திலும் அவர் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘சிந்து’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசி வருகிறார்கள். அவர் சம்மதிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதையை ஏற்கனவே தயார் செய்து விட்டனர். இப்போது பி.வி சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் கிளைமாக்சை மாற்றுகின்றனர்.