அக்டோபர் 9ம் தேதி சமந்தா – நாக சைதன்யா திருமணம் உறுதியானது

 'ஏ மாய சேசவே' என்ற தெலுங்குப் படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்த நாக சைதன்யா, சமந்தா இருவரும் படப்பிடிப்பின் போதே காதல் கொண்டார்கள். அப்போதிலிருந்தே தங்களது காதலை ஆரம்பித்து வளர்த்துக் கொண்ட இருவரும் கடந்த வருடம்தான் அது பற்றி வெளியில் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரது நிச்சயதார்த்தமும் நடந்தது.

இவர்களது திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி நடக்க உள்ளது. இது பற்றிய தகவலை நாக சைதன்யா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார். திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாம். இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடைபெற உள்ள இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. அதன்பின் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.