ஆகஸ்ட் முதல் வாரத்தில் அஜித்தின் ‘விவேகம்’

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கின்றனர்.  அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஐதராபாத்தில் அஜித் டப்பிங் பேசிக்கொண்டிருக்க, சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

கிராபிக்ஸ் பணிகளை  தொடங்கிவிட்டதால், திட்டமிட்டப்படி பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தணிக்கைக்கு அனுப்பவுள்ளோம் என்றும் தயாரிப்பாளர் சார்பில் தெரிவித்துள்ளார்கள்.