ஆக்டர் மனோபாலா மகன் ஹரிஷ் – பிரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரீஷ் – பிரியா திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழ் சினிமாவில் தனக்கென காமெடி ஸ்டைலை உருவாக்கி நடித்து வருபவர் மனோபாலா. தாய்மாமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான மனோபாலா, இதைத்தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, சேது, நண்பன், துப்பாக்கி, காற்றின் மொழி என இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் அனைத்து முன்னனணி நடிகர்களுடனும் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.