இந்தியன் 2 கைவிடப்பட்டுவிட்டதா? படக்குழு விளக்கம்

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தான்  அடுத்து இயக்கவுள்ளார். இப்படத்தில் உலகநாயகன் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர், மேலும் சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் படம் கைவிடப்பட்டதாக  சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அது வதந்திதான் என கூறிய படக்குழுவினர், அப்படத்திற்காக பொள்ளாச்சியில் மிகப்பிரமாண்டமாக செட் அமைத்து வருகிற 18ம் தேதி முதல் ஷூட்டிங் நடக்கவுள்ளது என அறிவித்துள்ளது.