இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சண்டைக் கலைஞர் சங்கப் பொன் விழா

இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சண்டைக் கலைஞர் சங்கப் பொன் விழா. இந்த சங்கத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பொன்விழா கொண்டாடப்பட உள்ளது; அதில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். சுமார் 6 மணி நேரம் வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் எங்கள் சங்கம் சார்ந்த மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளோம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மொழி நட்சத்திரங்களும் இந்தக் கலை விழாவில் பங்கேற்கவுள்ளனர். நடனம், விருதுகள், சண்டை கலைஞர்களின் சாகசம் என பல வித நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.