இளையராஜாவிற்க்காக பிரமாண்டமான விழா நடத்த விஷால் அணியினர் முடிவு

 நடந்து முடித்த  தயாரிப்பாளர்  சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.  இதன் மூலம் தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் மாறியுள்ளார்.

இந்நிலையில், விஷால் அணியை சேர்ந்த பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர்  இளையராஜாவை அவரது வீட்டில் சந்தித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம்  பேட்டியளித்த விஷால்   “இன்று எனது வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாள் ஆகும். இளையராஜாவோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம், இன்னும் ஒரு வருடத்திற்கு வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. விரைவில் அவருக்கு பிரமாண்ட விழா ஒன்றை நடத்த உள்ளோம். இது இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் விழாவாக இருக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது நமக்கெல்லாம் பெருமை. 
  
இளையராஜா நமது எல்லோரின் வாழ்விலும் கலந்து உள்ளார். நம்முடைய சோகம், சந்தோஷம் அனைத்திலும் அவர் பாடல்தான் நமக்கெல்லாம் ஆறுதல். எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கவே இந்த பிரமாண்ட விழா. அதற்கான பணிகள் இன்று முதல் தொடங்குகிறது” என அவர் கூறினார்.