உலகப்புகழ் பெற்ற சச்சின் மற்றும் ரஹ்மான் இணையும் ”சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’

இந்திய கிரிக்கெட் உலகின் ஹீரோ என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கர் நடித்த அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் போலவே இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் நாளை இரவு 7 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முதலாக உலகப்புகழ் பெற்ற இந்தியர்களான சச்சின் மற்றும் ரஹ்மான் இணைந்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.