எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அனிமேஷன் படத்தின் விழா.

எம்.ஜி.ஆர். 1973ம் ஆண்டு தயாரித்து,நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படம் மிக பெரிய வசூலை சந்தித்தது. இந்த படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று அவர் டைட்டில் கார்டு போட்டார். இந்த படத்தின் இரண்டாம் படத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் எடுக்க நினைந்திருந்தார் ஆனால் அவர் அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டதால் அது நடக்கவில்லை. இதனை தற்போது அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள். இந்த படத்தை அருள்மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.வேல்ஸ்  பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன்  தயாரிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடந்தது. இதில் ரஜினி,கமல் விருந்தினராகவும்,  எம்.ஜி.ஆர் உடன்  பணியாற்றிய நடிகர்கள்  லதா, சவுகார் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த படம்  எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் துவங்கப்பட்டது.படப்பிடிப்பு மார்ச் மாதம்  ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி,கமல் இருவரும் அரசியல் வருகை அறிவித்த பிறகு பங்கேற்றது இப்பட விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.