கடம்பன் ரிலீஸ் தேதி எப்போது?

ஆர்யா தனது உடலை வருத்தி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் 'கடம்பன்'.சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தனுஷ் இயக்கத்தில் உருவான 'பவர்பாண்டி' மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஆர்யாவின் 'கடம்பன்' திரைப்படமும் இந்த​ போட்டியில் இணைந்துள்ளது.