கட்டப்பாவை காணோம்’ ரிலீஸ் தேதி எப்போது?

'ஜாக்சன் துரை' படத்தை அடுத்து சிபிராஜ் நடித்து வந்த படம் 'கட்டப்பாவை காணோம்'. வித்தியாசமான டைட்டிலை கொண்ட இந்த படத்தை மணிசெய்யான் இயக்கி வந்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளிவந்துள்ளது.'கட்டப்பாவை காணோம்' படம் வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக சிபிராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார்.