Cine Events
கணவருடன் சேர்த்து வைக்க கோரி மனு தாக்கல் செய்த ரம்பா

தமிழ் சினிமாவில் 1990களில் பலரின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ரம்பா. இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் நடித்துள்ளார்.இவருக்கும், கனடா தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் சேர்த்து வைக்ககோரி இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நிலையில் குழந்தைகளை பார்த்து கொள்வது சிரமமாக இருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்து கொண்டுள்ளதாகவும் கருணை அடிப்படையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.