‘கத்திச்சண்டை’ ரிலீஸ் தேதி

விஷால்-தமன்னா நடித்து வந்த ஆக்சன் படமான 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது  நவம்பர் 18ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.
 
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் வடிவேலு, சூரியின் வித்தியாசமான கெட்டப் அனைவரையும் கவரந்ததால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.