கனா படத்தின் வெற்றிவிழா- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கு நடிகர் சத்யராஜ் வழங்கிய விருது!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான படங்களில் ஒன்று ‘கனா’. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்து அருண்காமராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று அனைத்து விநியோகிஸ்தர்களுக்கும் லாபம் பெற்று தந்தது. இந்த நிலையில் ‘கனா’ படத்தின் வெற்றிவிழா  நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தயாரிப்பு நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த நிலையில் ‘கனா’ படத்தில் ஒரு பாடலை பாடிய பாடகி என்ற வகையில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஆராதனாவுக்கு சத்யராஜ் வழங்கினார்.