கமலின் பிறந்தநாளில் தந்தைக்கு சிலை வைக்கும் விழா !

திருந்தார். கமல்ஹாசன் பிறந்த அதே நவம்பர் 7-ம் தேதிதான் அவரின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகனின் நினைவுநாளும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம். அதனால் இந்தப் பிறந்தநாளை தன் தந்தையை நினைவுகூரும் விதமாக பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளாராம். கடந்த 1959-ல் ஐந்து வயது சிறுவனாக திரையுலகில் `களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல். அதனால் திரையுலகில் அவருக்கு இது 60-வது வருடம். இது எல்லாவற்றையும் சேர்த்து சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் நினைவாக அவரது சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது. பின்னர் அந்தச் சிலை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நிறுவப்படவுள்ளது. சென்னையில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். கமல், தன்னுடன் இத்தனை ஆண்டுக்காலம் பயணித்த அனைத்து முக்கிய நபர்களையும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளாராம்.