கருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம் !

நடிகர் பார்த்திபன் – நடிகை சீதா தம்பதியின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இரு மகள்களின் திருமணமும் முடிந்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் இருக்கிறார், சீதா. மகள் அபிநயாவின் திருமண நிகழ்வு குறித்து, புன்னகையுடன் பேசுகிறார், சீதா. என் இரு மகள்களும் அப்பாவை மிஸ் பண்ணக்கூடாது. அவரும் மகள்களை மிஸ் பண்ணக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமா இருந்தேன். எங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, எங்க மகள்களின் கல்யாணத்தில் ஒருமித்த அன்புடன் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்தோம். இருவரும் தனித்தனியே பாதப் பூஜைகளைச் செய்துகிட்டோம். நான் செய்வதைவிட, மகளுக்கு அவர் கன்னிகாதானம் செய்துகொடுத்தால்தான் சிறப்பா இருக்கும்னு நினைச்சேன். அவரும் அதைச் சந்தோஷமா ஏத்துகிட்டு, இரு மகள்களுக்கும் கன்னிகாதானம் செய்துகொடுத்தார். பல்லக்கில் மகளைக் கூட்டிட்டு வரும் நிகழ்வையும் அவரே செய்தார். இதனால் அவருக்கும், எனக்கும், மகள்களுக்கும் ரொம்பச் சந்தோஷம். எங்களைப் பார்த்து, கல்யாணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சி. கருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம். எனவே அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார், சீதா.