கர்நாடக இசை மேதை பால முரளிகிருஷ்ணா மரணம்

பழம் பெரும் கர்நாடக இசைப் பாடகர், பால முரளிகிருஷ்ணா, 86, உடல் நல பாதிப்பால், சென்னையில், நேற்று காலமானார். 1930ல், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சங்கரகுப்பம் கிராமத்தில் பிறந்தார். வர்ணங்கள், கீர்த்தனைகள், ஜாவளிகள், தில்லானாக்கள் என, 400-க்கும் மேற்பட்ட உருப்படிகளை, தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உருவாக்கி உள்ளார். 1987ல், சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். 1971ல், பத்மஸ்ரீ; 1991ல், பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார். ஐந்து பல்கலைகளில் கவுரவ டாக்டர் பட்டமும், பிரான்ஸ் நாட்டின், 'செவாலியே' விருதும் பெற்றுள்ளார். சென்னை, மயிலாப்பூர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்; நேற்று மாலை இறந்தார். அவரது உடலுக்கு, கர்நாடக இசை கலைஞர்கள், திரையுலகத்தினர் மலர் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்குகள், இன்று நடக்கின்றன.