Cine Events
‘கவண்’ சென்சார் ரிசல்ட் மற்றும் ரிலீஸ் தேதி
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி-மடோனா செபாஸ்டியன் மீண்டும் ஜோடியாக நடித்த படம் 'கவண்'.இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
'கவண்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியையும் ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இந்த படம் மார்ச் 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.