காமெடி நடிகர் தவக்களை காலமானார்

இயக்குனர் பாக்யராஜ் நடித்த முந்தானை முடுச்சு படத்தின் மூலம் காமெடி நடிகனாக அறிமுகமான காமெடி நடிகர் சிட்டிபாபு என்ற தவகளை வயது 42.இவர் நேற்று காலை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய 6 மொழிகளில் நடித்துள்ளார் மற்றும் இதுவரை 496 படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது இறுதிச்சடங்கு இன்று காலை 10 மணிக்கு ஏ.வி.எம் சுடுகாட்டில் நடைபெற உள்ளது.