குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி !

நடிகர் சிம்புவின் சகோதரரும் டி.ராஜேந்தரின் மகனுமான குறளரசன் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். திருமணம் அண்மையில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. தான் காதலித்த பெண் ஒரு இஸ்லாமியர் என்பதால் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது தந்தையின் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் குறளரசன். மேலும் கடந்த ஒரு மாதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரையும் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா உட்பட திரைப் பிரபலங்கள் பலரையும் சந்தித்து தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்துவந்தார் டி.ஆர். அண்மையில் குறளரசன் – அபீலா அஹ்மத் ஆகியோரது திருமணம் சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்றது. இதைதொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் நடைபெற்றது.