குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் !

பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக்லேட். இதில் நட்டி என்கிற நட்ராஜ், காயத்ரி, தேஜஸ்வினி, தீக்ஷளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் லாவண்யா நான்சி இயக்கியிருக்கிறார். பாடல்களை மீரான், ம.மோகன் எழுத, பவதாரிணி பாடியிருக்கிறார். குறும்படம் ஒன்றிற்கு பவதாரிணி பின்னணி பாடியிருப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்படத்தினை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு, விருகம்பாக்கம் தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் வி.என்.ரவி, விளாத்திகுளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஐசரி.கே.கணேஷ், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சாய் தன்ஷிகா, இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான கவிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பொதுவாக தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் முழுமையாக கவனிப்பதில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் இந்த குறும்படம் பெற்றோர்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன், என்றார். இதனைத் தொடர்ந்து சாக்லேட் குறும்படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார். வருகை தந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் கவிதா நன்றி தெரிவித்தார்.