சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு படமாகிறது

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபார சாதனைகள் நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு ‘சச்சின்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்

ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். 1,000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது.