Cine Events
சந்தானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக மாறிவிட்டார். நகைச்சுவையில் கலக்கிவந்த அவர் இப்போதெல்லாம் அப்படி நடிப்பது கிடையாது. காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றே சொல்லலாம். தற்போது அடுத படமனா, செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்துக்கு 'மன்னவன் வந்தானடி' என்று தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டது. காதலும், காமெடியும் கலந்த தமிழ் படமாக செல்வராகவன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தானத்துக்கு ஜோடியாக அதிதி பொஹங்கர் நடிக்கிறார்.