சபாஷ் சரியான போட்டி – ‘பேட்ட – விஸ்வாசம்!!!’

தமிழ்த் திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தலை அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் முதன்முறையாக ஒரே நாளில் வெளியாக முடிவாகியுள்ளது.

ஒரே நாளில் இவ்விரு படங்களும் களத்தில் இறங்கியுள்ள காரணத்தால் சூப்பர்ஸ்டார் மற்றும் தலையின் ரசிகர் மன்றங்கள் 'ஜனவரி 10 ஐ' நோக்கி மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

திரையரங்குகளை விற்பனைப் பதிவுகள் செய்வதில் ஒரே போட்டா போட்டியாக உள்ளது.

விஸ்வாசம் திரைப்படத்துக்காக செங்கல்பட்டைத்தவிர மற்ற ஏரியாக்களில் சுமார் 400 திரையரங்குகள் ஜனவரி 5 முதல் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயம் மிகவும் குறிப்பிடத்தக்கது.