சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை விழா !

சென்னையில் ஒய். எம்.சி.ஏ கல்லூரியில் வருகின்ற 8 ஆம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடல்கள் பாட உள்ளார். இதில் அவருடன் பணியாற்றிய இசை கலைஞர்களை வைத்து இசை கச்சேரி நடத்த உள்ளார் சித் ஸ்ரீராம். பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் சித். இவர் பாடிய தள்ளி போகாதே பாடல், மறுவார்த்தை பேசாதே, கண்ணாண கண்ணே போன்ற பாடல்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இசைமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுடன் பணியாற்றியதில் மிகவும் சந்தேஷப்படுகிறேன். வரும் 8 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி அனைத்து வயதினரையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என்று பதிலளித்தார் சித் ஸ்ரீராம். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சி, சென்னை, மதுரை, கொச்சின்,பெங்களூரு போன்ற நகரங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்றார் சித் ஸ்ரீராம்.