Cine Events
சினிமா தியேட்டர்களில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் தியேட்டர்களில், படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். திரையில் தேசிய கொடி தோன்ற வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். மத்திய அரசு உடனடியாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒருவார காலத்திற்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வைத்து வர்த்தக ரீதியாக யாரும் எந்த விதமான பலன்களையும் உருவாக்க கூடாது. தேசிய கீதத்தின் போது தேவையில்லாத படங்கள் எதுவும் தோன்ற கூடாது என் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.