சிம்புவின் அதிரடி முடிவு
ஜல்லிக்கட்டு நடத்த கோரி விடிய விடிய தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமான நடிகர் சிம்பு.இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் ஒரு அதிரடி போராட்ட திட்டத்தை சிம்பு அறிவித்துள்ளார்.
இன்று இரவு 8 மணிக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஒரு இடத்தை தேர்வு செய்து போராட்டம் நடத்த தயாராகுங்கள்.மருத்துவமனை ஊழியர்கள் தவிர நாளை அனைவரும் கூடி நாம் யார் என்பதை காட்டுவோம்.
நமது போராட்டத்திற்கு பல வகைகளில் பிரச்சனை கொடுப்பார்கள். ஆனால் நாம் இந்த விஷயத்தை விடப்போவதில்லை. நாம் அனைவரும் ரோட்டில் உட்காருகிறோம். இந்த பிரச்சனை தீரும் வரை எழுந்திருக்க போவதில்லை என்று தெளிவாக கூரியுள்ளார்.