சிம்பு படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது

சிம்பு நடித்த படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதே ஆச்சர்யம். அந்த ஆச்சரயத்தை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது  மைக்கேல் ராயப்பன்  தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். இந்தப் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது. படம் ரெடியான கையோடு தணிக்கைக்கு அனுப்பி சான்றிதழும் பெற்றுவிட்டார்.

அடுத்த கட்டமாக, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு தியேட்டர்களை புக் பண்ணும் பணிகளையும் முடுக்கிவிட்டார். ஏஏஏ படத்துக்கு உலகம் முழுக்க ஏறக்குறைய 1000 தியேட்டர்களில் வெளியாவதன் மூலம் சிம்பு நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையில் வெளியாகும் படம் என்ற பெருமையும் ஏஏஏ படத்துக்குக் கிடைத்திருக்கிறது.