சிம்பு பாடலை வெளியிடும் தனுஷ்

சிம்புவும் தனுஷீம் நெருங்கிய​ நண்பர்கள். ஆனால், இவர்கள் எப்போது சண்டை போடுவர், எப்போது நட்பாக​ இருப்பர் என்று தெரியாது. இந்நிலையில் பல வருடங்களாக​ விடிவி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா.

இந்த படத்தின் மூலம் சிம்பு, இசை அமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். டிசம்பர் 22 அன்று ரிலீசாகவிருக்கும் இந்த படத்தின் பாடல்களை டிசம்பர் 6-ஆம் தேதி வெளியிட உள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு சிம்பு இசை அமைத்த பாடல்களை வெளியிட உள்ளார்.