சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் இசை நிகழ்ச்சி !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, நட்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் சன் டிவி நெட்வொர்க் செயல் இயக்குனர் காவ்யா கலாநிதி மாறன், இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சமுத்திரக்கனி, நட்ராஜ், சுப்பு பஞ்சு, நரேன், ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘இவன் நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற தீம் பாடலுக்கு இமான் மேடையில் ஆடிப்பாடி அசத்தினார். ‘காந்த கண்ணழகி’, ‘மயிலாஞ்சி’, ‘எங்க அண்ணன்’ பாடல்களுக்கு நடனக் கலைஞர்களின் கண் கவரும் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.