சூர்யாவின் சிங்கம் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிங்கம் 3 ஹரி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும் இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், சிங்கம் திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகவுள்ளது.சிங்கம் வரிசையின் முதல் இரு பகுதிகளுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார்

இந்நிலையில் இன்று அதிகாரபூர்வ போஸ்டருடன் வெளியீட்டு தேதி ஜனவரி 26 ம் தேதி என்று அறிவித்துள்ளனர். சிங்கம் படத்துக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதால் இப்படத்தின் ஓப்பனிங் பெரியளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது