சென்னை சர்வதேச திரைப்பட விழா : டிசம்பர் 12ல் தொடங்குகிறது!

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும் இந்தியன் சினி அப்பரிசேஷசன் அமைப்பும் இணைந்து இதனை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான 17 வது சர்வதேச திரைப்படவிழா வருகிற டிசம்பர் 12 முதல் 19 வரை 8 நாட்கள் நடக்கிறது. விழா குறித்த அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் கண்ணன், துணை தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. சிறந்த தமிழ் படத்திற்கான போட்டியும் நடக்கிறது. தேர்வான படங்கள் தேவி, தேவி பாலா, அண்ணா, காசினோ ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்படுகிறது. தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ருபாய் 6 லட்சமாகவும் இளம் சாதனையாளர் விருதின் பரிசு தொகை ருபாய் 1 லட்சமாகவும் இருக்கும்.