‘சென்னை 28 II’ சென்னை வசூல் நிலவரம்

வெங்கட்பிரபு கிரிக்கெட்டை மையமாக​ வைத்து இயக்கிய​ படமான 'சென்னை 28 II' வசூல் மழையில் நனைந்துள்ளது. கடந்த வார இறுதியில் சென்னையில் 21 திரையரங்குகளில் 233 காட்சிகள் திரையிடப்பட்ட இந்த படம் ரூ.74,26,580 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். மேலும் இந்த படம் வெளியான டிசம்பர் 9 முதல் 18 வரை ரூ.2,65,29,860 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் கிங் என்பதை நிரூபித்துள்ளது.