ஜல்லிக்கட்டு ஆதரவாக சூர்யாவின் குழந்தைகள் செய்த அழகான செயல்!

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்த நடிகர் சூர்யா தனது 'சி3' படத்தின் மதுரை மற்றும் நெல்லையில் விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். இந்நிலையில் இன்று மெரினாவில் மாணவர்களுடன் தானும் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தார். இந்நிலையில் தற்போது சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா ஆகியோர் ஜல்லிக்கட்டை ஆதரித்து காளையின் படத்தை வரைந்துள்ளனர். அந்த படங்களை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.