ஜீவா நடிக்கும் கலக்கலான கமர்ஷியல் படம் – சீறு !

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை,  ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”.  நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை  ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் ரத்தினவேலு கூறியது, இது மூன்றாவது படம். முதலில் அஷ்வினுடன் கதை சொன்ன போது எந்த ஹீரோவை வைத்து செய்யலாம் என பேசினோம். ஒரு ஆக்‌ஷன் ஹீரோ வேண்டும் என்று ஜீவாவிடம் போனேன். கதை கேட்டவுடன் நாம் பண்ணலாம் என்று சொன்னார். ஐசரி கணேஷ் சாரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் அவர் கதை கேட்டு இது ஹிட்டாகும் என்றார். எளிதில் எந்த ஒரு விசயத்தையும் தீர்மாணிப்பவராக அவர் இருக்கிறார். அஷ்வின் மொத்த படத்திற்கும் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். ஜீவா ஒரு அருமையான நடிகர். இதில் வில்லனாக நடித்துள்ள வருண், சாந்தினி ஆகியோர் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலம் இமான் இசை. இந்தப்படம் வரும் 7ந்தேதி வருகிறது.