ஜெய்-அஞ்சலி அவர்களின் உறவு உறுதியாகியது
நடிகர்கள் ஜெய்யும் – அஞ்சலியும் காதலிப்பதாக நீண்டகாலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதை இருவரும் மறுக்கவும் இல்லை, உண்மை என்று கூறவும் இல்லை. தற்போது இருவரும் “பலூன்” படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெய்க்கு பிறந்தநாள் வந்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அஞ்சலி ஏற்பாட்டின் படி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு (ஜூன் 16-ம் தேதி) பிறந்தநாள். இதையொட்டி ஜெய், தன் டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதுவும் தன் காதலை அன்பு மழையாக பொழிந்துள்ளார்.
அதில், “எனக்கு நீ எவ்வளவு சிறப்போ… அதேபோன்று இந்த நாள் உனக்கு சிறப்பாக அமையட்டும். என் ஒவ்வொரு நாளையும் நீ நீயாக இருந்து சிறப்பாக்குறாய் என்பதை உனக்கு தெரிவித்து கொள்கிறேன். நானும், கடவுளும் என்றுமே உன்னுடன் இருப்போம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு என்று கூறியுள்ளார்.
பதிலுக்கு அஞ்சலியும், ஜெய்க்கு தன் டுவிட்டரில் நன்றி தெரிவித்திருப்பதோடு, என்னோடு நீ இருப்பதற்கு நன்றி, அது என்று தொடர வேண்டும். இந்தநாளில் இப்படியொரு ஸ்பெஷல் வாழ்த்து சொல்லியதற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.