டிராபிக் ராமசாமி வாழ்க்கை சினிமாவாகிறது

பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. தனி மனிதனாக அரசியல் கட்சிகளையும், அரசையும் எதிர்த்து போராடி திக்குமுக்காடச் செய்து வருகிறார். அவரது வாழ்க்கை சினிமாவாகிறது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேரின் உதவியாளர் விஜய் விக்ரம் இயக்குகிறார். கிரீன் சிக்னல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதில் டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.என் உதவி இயக்குனரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம் இப்படத்தை இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே என்னை வைத்து பலரும் பாராட்டிய நகைச்சுவையான மார்க் என்ற குறும்படத்தை இயக்கியவர். விரைவில் இதன் படப்பிடிப்புகள் துவங்குகிறது. என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.