டீசர், டிரைலர் வெளியீடு தேதி மாற்றம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார் நடித்துள்ள படம் 2.O. இந்த படத்தின் இசை வெளியீடு விழா   சில வாரங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்றது.
 இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்  வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், 2.0 படத்தின் டீசர் நவம்பர் 22-ந்தேதி ஐதராபாத்திலும் மற்றும் டிரைலர் டிசம்பர் 12-ந்தேதி சென்னையிலும்  வெளியிடயிருப்பதாக  முன்பு  அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது டீசர், டிரைலர் வெளியீடு தேதிகள் மாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணம் என்னவென்று  தெரிவிக்கப்படவில்லை.