டோரா படதளத்தில் காமெடியன்களை கலாய்த்த நயன்தாரா!

நயன்தாரா இருமுகன் படத்தையடுத்து காஷ்மோரா, டோரா, இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் டோரா படத்தில் ஹாரர் கதையில் நடிக்கிறார். முக்கியமாக பல காட்சிகளில் அதிரடியான பேயாக வந்து மிரட்டலாக நடித்துள்ளாராம்.இப்படத்தில் நயன்தாரா மிரட்டலாக ரசிகர்களை அதிரவைக்கும் வகையில் நடித்துள்ளதாக​ படக்குழுவினர் கூறியுள்ளனர். தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தை இயக்குநர் சற்குணம் தயாரித்துள்ளார்.

மேலும், டோரா படத்தில் நடித்தபோது ஸ்பாட்டில் ரொம்பவே கலகலப்பாக காணப்பட்டாராம் நயன்தாரா. குறிப்பாக, முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் அமைதியாக​ இருக்கும் நயன்தாரா,தற்போது அதற்கு நேர்மாறாக செம ரகலையாக​ காணப்படுகிறார். அதோடு, இப்படத்தில் நடித்துள்ள சில காமெடியன்களை  கலாய்த்து வருகிறாராம் நயன்தாரா. அந்த வகையில், ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும் அவர்களிடமும் அன்பாக பழகினாராம் நயன்தாரா.