தமிழ் படங்களில் மலர் டீச்சர்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை பார்த்த, தமிழ் சினிமா ரசிகர்கள், அதில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி, தமிழ் படங்களில் நடிக்க மாட்டாரா என, ஏங்கினர். சரியான கதை அமையாததால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் சாய் பல்லவி.விஜய் இயக்கும், கரு என்ற படத்தில், பிரபுதேவா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறாராம்.

'நடனத்தில் அசாத்திய திறமை வாய்ந்த பிரபுதேவாவும், சாய் பல்லவியும் நடிப்பதால், இந்த படத்தின் கதையில், கண்டிப்பாக நடனத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்' என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.