Cine Events
தமிழ் முதல் விண்வெளி கதை
” டிக் டிக் டிக் ” ஒரு விஞ்ஞான கற்பனை கதை. விண்வெளி ஆய்வுக்காக ராக்கெட்டில் பயணிக்கும் விண்வெளி வீரரான ஜெயம்ரவி, விண்வெளியில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. 90 சதவிகிதம் கிராபிக்ஸ் பயன்படுத்தப்படும் கதை. பெரும்பாலான படப்பிடிப்புகள் இதற்கென பூந்தமல்லியை அடுத்த ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் தனியாக உருவாக்கப்பட்டுள்ள கிரீன் மேட் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.
தற்போது இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் தாங்களும் விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துமாம்.