தர்பார் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில், மாலை 5 மணிக்கு தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில், படத்தின் மீதமுள்ள பாடல்கள் அனைத்தும் வெளியிடப்படுகிறது. தவிர, அரசியல் வருகையை எதிர்நோக்கியுள்ள ரஜினி, இன்றைய விழாவில் அதுகுறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் பட இசை வெளியீட்டு விழாவுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரஜினி ரசிகர்கள் வந்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று திருநங்கைகளின் ’ஸ்பைசி கேர்ள்ஸ்’ என்ற இசைக்குழுவும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் தர்பார் படத்திற்கான பாடல் பதிவில் அவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதைப்பற்றி மூவரில் ஒருவரான சந்திரமுகி, “தர்பார் படத்தில் திருநங்கைகளின் நடனமும் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில், குரலில் மாற்றத்துடன், வழக்கமான பாடகர் பாடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நாங்கள் மூன்று பேர் – ராச்சனா, பிரியா மற்றும் நான் – ஹைதராபாத்தில் ’ஸ்பைசி கேர்ள்ஸ்’ என்ற இசைக் குழு வைத்திருக்கிறோம். விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா, தர்பார் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத் தக்கது.