தர்ம பிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா !

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மபிரபு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய யோகிபாபு சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்தார். தர்மபிரபு படத்தில் இரண்டு ஹீரோ. எமலோகத்தில் நான் ஹீரோ, பூலோகத்தில் சாம் ஹீரோ. என் கெட்டப் கம்பீரமானது. இந்த கெட்டப்பை போட்டு பாரு திமிர் வரும் என்றார் ரேகா மேடம். உண்மையாகவே, எமதர்மன் கெட்டப் போட்டால் செம திமிர் இருக்கிறது என்று தெரிவித்தார்.