“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் டீஸர் விரைவில்
கொம்பன் படத்துக்குப் பிறகு வெற்றிப்படங்களைக் கொடுக்காததினால் கார்த்தியின் நட்சத்திர அந்தஸ்து சற்றே ஆட்டம் கண்டுள்ளது. அதனால் சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் கார்த்தி.
கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் படப்பிடிப்பு ஜெய்ஸால்மர், பூஜ் மற்றும் சென்னை பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டநிலையில் விரைவில் டீஸரையும் வெளியிட உள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இறுதிகட்டப் பணிகள் திட்டமிட்ட தேதியில் முடிவடையாததினால் படத்தின் வெளியீட்டை இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள்.