துவங்கியது சர்வதேச திரைப்பட விழா !

திருவண்ணாமலையில், இன்று சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில், ஆறாவது ஆண்டாக, 16 முதல், 20 வரை உலக திரைப்பட திருவிழா நடக்கிறது. இதில், ஹங்கேரி, ஸ்வீடன் உள்ளிட்ட, 12 நாடுகளை சேர்ந்த, 22 படங்கள், திரையிடப்பட உள்ளன. இதை கலெக்டர் கந்தசாமி, திருவண்ணாமலை அருணாச்சலா தியேட்டரில் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், சினிமாத்துறையை சேர்ந்த இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க, மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் செய்யப்பட்டுள்ளது. அதில் சங்கத்தின் மாநில துணைபொதுச்செயலாளர் கருணா பேசும் போது, உலக திரைப்பட விழாக்கள் என்பது சென்னை, மும்பை, கோவா, திருவனந்தபுரம் என பெரும் நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. அதனை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் கம்பம், பட்டுக்கோட்டை, திருப்பூர் போன்ற நகரங்களில் நடத்த துவங்கியுள்ளோம். 5 நாட்கள் 22 காட்சிகள் காண 1000 ரூபாயும், ஒருநாள் மட்டும் காண 200 ரூபாயும், ஒரு படம் மட்டும் காண 50 ரூபாய் நன்கொடையாக அளித்தால் போதுமானது. இந்த விழாவில் ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, ஹங்கேரி என 12 நாடுகளை சேர்ந்த 22 திரைப்படங்கள் திரையிடவுள்ளனர்.