Cine Events
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது.
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி அவருடன் நடித்த ஹீரோயினிகள் தங்களது மலரும் நினைவுகளை பகிந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், பாடலாசிரியர் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. பல்கலை கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முன்னிலையில் விஜயகாந்த் எம்.சி.ஆர் சிலையை திறந்து வைத்தார். இதில் நடிகர் சங்க தலைவர்கள், செயலாளர்கள், துணை செயலாளர்கள் என நடிகர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்சியில் சங்கர் கணேஷ் இன்னிசை கச்சேரி நடந்தது.