நடிகர் சங்கம் பிரிகிறதா?
நடிகர் சங்கத்தில் இருந்து, சரத்குமார், ராதாரவி நீக்கப்பட்டதை தொடர்ந்து, விஷால் அணிக்கு போட்டியாக, புதிய நடிகர் சங்கம் துவக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இது குறித்து, சினிமா வட்டாரம் தெரிவித்திருப்பது, அரசியலை போலவே, நடிகர் சங்கத்திலும், புதிய நிர்வாகிகள் வந்ததும், பழைய நிர்வாகிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்த தவறான நடைமுறையே, புதிய சங்கத்தை உருவாக்கி விடும். நடிகர் சங்க தேர்தலின் போது, சங்க பெயர் மாற்றம் பற்றிய பேச்சு எழுந்தது. இது குறித்து, ரஜினி, கமல் கூறிய கருத்துக்கள், முரண்பாடாக அமைந்திருந்தது.
இந்நிலையில், விஷால் அணிக்கு, கமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்; ரஜினி வழக்கம் போல அமைதி காக்கிறார். சரத்குமார், ராதாரவி நீக்கம் உறுதியானால், புதிய நடிகர் சங்கம் உருவாவதும் உறுதியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.