நடிகர் சார்லி மகன் திருமணம் – சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து

காமெடியனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக பட்டையை கிளப்பும் நடிகர் தான் சார்லி. அதனை முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நான்கு தலைமுறை நடிகர்களுடனும் சினிமாவில் கொடி  கட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.  இவருடைய மகன் ஆதித்யாவிற்கும், அமிர்தா என்கிற பெண்ணுக்கும் நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த இளைய திலகம் பிரபு, நாசர், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், ராதாரவி, செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.