நம்ம வீடு பிள்ளையின் சக்ஸஸ் மீட் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் நம்ம வீட்டு பிள்ளை. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இப்படம் வெளியானது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான சீமராஜா மற்றும் மிஸ்டர்.லோக்கல் என இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது. ஆகவே தான், நம்ம வீட்டு பிள்ளை படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என சிவகார்த்திகேயன் உள்பட அவரது அபிமானிகளும் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, படமும் மக்களிடையை நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சன் பிக்சர்ஸால் நடத்தப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ், சூரி, டி.இமான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.